நுவரெலியா மாவட்டம் நானுஓயா, டெஸ்போர்ட் எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (18) காலை குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பாடசாலை மாணவிகள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 6, 7 மற்றும் 8 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை சுமார் 8 மணியளவில் பாடசாலையின் காலை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.













