விவசாயக்கண்காட்சியின் (Paris Salon de l’agriculture) போது கத்திக்குத்து மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று , பார்வையாளர்கள் மற்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் (கால்நடை பண்ணையாளர்கள், விவசாயிகள்) இடையே மோதல் வெடித்தது. பார்வையாளர்கள் சிலர் கண்காட்சியாளர்களை தாக்கியுள்ளனர். பின்னர் இரு தரப்பும் சண்டையிட்டிருந்தனர்.
பொலிசார் தலையிட்டபோது, அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதுடன், கலவரத்தில் ஈடுபட்ட 15 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டனர்.

















