2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இன்று (04) தென்னாப்பிரிக்க அணியும், நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியானது இன்று இரவு 07.00 மணிக்கு கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகும்.
ஐடன் மார்க்ரம் தலைமையிலான அணியானது தொடரில் இதுவரை தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் தொடக்கத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது.
மறுபுறம் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியானது கலவையான வெற்றி தோல்வுயுடன் அரையிறுதிக்குள் நுழைகிறது.
சர்வதேச டி:20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் மோதியுள்ளன.
அவற்றில் தென்னாப்பிரிக்கா 12 வெற்றிகளையும், நியூஸிலாந்து 07 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
அதேநேரம், டி:20 உலகக் கிண்ண அரங்கில் இரு அணிகளுக்கு இடையிலும் நடந்த 05 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.














