இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடைகளைக் கிழித்ததாகக் கூறப்படும் லொறி சாரதி ஒருவரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக இரண்டு அதிகாரிகள் குறித்த லொறியின் சாரதியைக் கைது செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேக நபர் பயாகலையைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாகொட சந்தியில் உள்ள சாலைத் தடையில் நிறுத்தப்பட்டபோது, சந்தேக நபர் கட்டுகுருந்த நோக்கி லொறியை செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளில் ஒருவரின் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.














