நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அத்தகைய நீர் விநியோகத் தடைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை நிலவரத்தால் வரும் காலத்தில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகலாம் என்றும் அவர் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.
அம்பத்தளை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகம் ஏற்கனவே குறைந்த அழுத்த நிலையில் உள்ளது.
எனவே, பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சந்தன பண்டார, குறைந்த அழுத்த நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது டேங்கர் லொறிகள் மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.














