லண்டன் இசை விழா ஒன்றின் முக்கியக் கலைஞர் என்ற தனது அந்தஸ்து குறித்து அதிகரித்து வரும் எதிர்ப்புகளுக்கு அமெரிக்க ராப் பாடகரான கான்யே வெஸ்ட் (Kanye West) முதன்முறையாகப இன்றைய (07) தினம் பதிலளித்துள்ளார்.
அதில் அவர், லண்டன் பயணத்தின் போது என் இசையின் மூலமாக ஒற்றுமை, அமைதி மற்றும் அன்பைக் கொண்டுவந்து, ஓர் மாற்றத்தை நிகழ்த்துவதே தனது ஒரே குறிக்கோள் என்று அவர் கூறினார்.
மேலும், தனது கோடைக்கால லண்டன் பயணத்தில் பிரித்தானியாவில் உள்ள யூத சமூக உறுப்பினர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் கான்யே வெஸ்ட் யூத-விரோத கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து லண்டனில் நடைபெறும் வயர்லெஸ் திருவிழாவில் அவரது பங்கேற்பும், நாட்டுக்கான வருகையும் தடை செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வரும் இந்த அறிக்கை வந்துள்ளது.
அதேநரேம், தற்போது யோ என்று அழைக்கப்படும் அமெரிக்க ராப் பாடகரை நாட்டிற்குள் அனுமதிப்பதாக இல்லையா என்பது குறித்து அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்த ஜூலை மாதம் ஃபின்ஸ்பரி பூங்காவில் நடைபெறும் திருவிழாவின் மூன்று இரவுகளிலும் முக்கியக் கலைஞராகப் பங்கேற்க உள்ள இந்த ராப் பாடகர், தொடர்ச்சியான யூத-விரோதக் கருத்துக்களுக்காகவும், அடால்ஃப் ஹிட்லர் மீதான பகிரங்கமான அபிமானத்திற்காகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
வயர்லெஸ் திருவிழாவில் கான்யே வெஸ்ட் முதன்மைக் கலைஞராக அறிவிக்கப்பட்ட பின்னர் பெப்சி (Pepsi) மற்றும் டயாஜியோ (Diageo) உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் நிகழ்விற்க்கான தங்களது நிதியுதவியை விலக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
















