QR குறியீடு இல்லாமல் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் பெறுவதற்கு வழங்கப்பட்ட தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இதற்கு அமைவாக, நாளைமறுதினம் முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்திற்கு QR குறியீடு முறை மீண்டும் கட்டாயமாக்கப்படும்.
மேலும், எரிபொருள் விநியோகத்திற்கான தற்போதுள்ள ‘ஒற்றை-இரட்டை’ வாகனப் பதிவு எண் முறை அனைத்து வாகனங்களுக்கும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
தமிழ்-சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பயணிகளின் அதிகரித்த போக்குவரத்து நடவடிக்கையினை கருத்திற்கொண்டு ஒரு குறுகிய கால நடவடிக்கையாக இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது.













