பிரித்தானிய யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிப்பது நம்மனைவருக்குமான பாரிய நெருக்கடி என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதற்கு முழு சமூகத்தின் ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கை தேவை என்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் வடக்கு லண்டனில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்புவாதம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
வணிகம், குடிமைச் சமூகம், சுகாதாரம், கலாச்சாரம், உயர்கல்வி மற்றும் காவல்துறை ஆகிய துறைகளின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தத்தமது துறைகளில் யூத எதிர்ப்பியலை எதிர்கொள்ள எவ்வாறு வேகமாக நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனவுமு் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்டர்ஸ் கிரீனில் கடந்த புதன்கிழமை இரண்டு யூத ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, 45 வயதான ஈசா சுலைமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை கடுமையான நிலையக்கு உயர்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















