முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
51 வயதுடைய மெக்சிமின் கார்ட்டர் (Maximin Carter) என்ற நபருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நிஞ்ஜா வாள், காப்புக்கத்தி , ஏர் ரைபிள் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்ட்டரின் முன்னாள் காதலி, தனது அனுமதியின்றி வீட்டுக்குள் தங்கியிருந்த கார்ட்டர் மீது சந்தேகித்த நிலையில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தார்.
இதேவேளை, குறித்த நபரிடம் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதை அடுத்து இராணுவப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அந்த வீடு முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து மேற்குறிப்பிட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய கார்ட்டருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.













