கடந்த 24 மணி நேரத்தில் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் அதிகபட்சமாக 244 மில்லி மீற்ற மழை வீழ்ச்சு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 21 ஆம் திகதி காலை 8:30 மணி முதல் மே 22 ஆம் திகதி அதிகாலை 4:00 மணி வரையிலான காலகட்டத்தில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழை கண்காணிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர, கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொட பகுதியில் 238 மி.மீ மழை வீழ்ச்சு, கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் 230 மி.மீ மழை வீழ்ச்சு பதிவாகியுள்ளது.














