தற்போது அதிகரித்துள்ள மிகவும் அபாயகரமான டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (15) முதல் டெங்கு ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
அதன்படி, இன்று முதல் 17 ஆம் திகதி வரை நகரங்கள், கழிவுநீர் அமைப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட உள்ளன.
பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் தனியார் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் அவற்றின் சுற்றுப்புற வளாகங்களும் இதன்போது சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணி 19 ஆம் திகதிக்கும், தனியார் வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணி 20 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.















