மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 65 மீள மின்னேற்றம் செய்யக்கூடிய (rechargeable) மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
யக்கல பொலிஸ் பிரிவில் நேற்று (22) மாலை இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் வீரங்குலாவைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர் முக்கியமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து, இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதன் மூலம் இந்த மின்னணு சிகரெட்டுகளை (e-cigarettes) விற்பனை செய்து வந்ததாகக் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவு இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.













