• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள்; முழு விபரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/23
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

2026.06.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்:

01. கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல்

அரசியல் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பலவந்தமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தல், சட்டவிரோதமாக காணிகளை நிரப்புதல் மற்றும் கடலோரங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

இந்நிலைமையால் அப்பிரதேசங்களின் இயற்கைச் சூழல் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், இவ்வாறான முறையற்றதும் சட்டவிரோதமானதுமான மனித செயற்பாடுகளால் ஒட்டுமொத்த கிழக்கு மாகாண கடற்கரையோரமும் மோசமான கடலரிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. அத்துடன், சிவில் யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்திருப்பினும், இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக மீளக்குடியமர்த்துவதில் முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படாமையாலும், மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் போது அளவுகோல்களைக் கடைப்பிடிக்காமையாலும் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் நேரடியான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இப்பிரச்சினைகளுக்குத் துரிதமானதும் நிரந்தரமானதுமான தீர்வுகளைக் கண்டறிதல், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள கீழ்வரும் யோசனைகளை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


• ‘கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல்’ எனும் பெயரிலான தென்மாகாண முன்னாள் காணி ஆணையாளர் மற்றும் தற்போதைய தென்மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், சேனக பல்லியகுருகே அவர்களின் தலைமையில், ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமித்தல்

• பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட அலகொன்றை உடனடியாக நிறுவுதல் மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோதமாகக் காணிகளைக் கையகப்படுத்தல் மற்றும் நிரப்புதல் போன்றவற்றை நிறுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குதல்

• இலங்கை மகாவலி அதிகாரசபையால் 05 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு முன்னர் வர்த்தகப் பெறுமதியுடன் வழங்கப்பட்டுள்ளதும், ஆனாலும் இதுவரை எவ்வித கருத்திட்டங்களையும் ஆரம்பிக்காதுள்ள காணிகளை உடனடியாக அரசுக்கு எடுத்தல்;

• அவ்வாறு எடுக்கப்படுகின்ற காணிகளை பிரதேச செயலாளர்களுக்கு பாரப்படுத்தி முறைசார்ந்த வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச மக்களுக்கு அபிவிருத்திக்காக வழங்குதல்

• கிழக்குக் கரையோரங்களில் காணப்படுகின்ற உச்ச ஆற்றல்வளங்களைப் பயன்படுத்தி, கடலோரச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு துரிதமான முறையான திட்டத்தைத் தயாரித்தல்

• கிழக்குக் கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் ஹோட்டல்களை நடாத்திச் செல்லும் போது அரச ஊழியர்கள் பக்கச்சார்பின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டம் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துகின்ற பொறிமுறையைத் தயாரித்தல்

02. அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல்

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுநிருபங்கள் ஆலோசனைகள் வெளியிடப்படுவதுடன், கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளைக் குறைக்கும் வகையில் செயலாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை வகுப்பதே அதன் நோக்கமாகவுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அதிபர்மார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் கருத்தில் கொண்டு, மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்பின் மீதும் கவனத்தைச் செலுத்தி புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2027 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்துவரும் காலங்களில் அரச பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கிய புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், ‘சமூக மற்றும் நடத்தை மாற்றத்தின் மூலம் சிறுவர் சுகாதார மேம்பாட்டுக்கான தேசிய தொடர்பாடல் வேலைத்திட்டத்தை’ நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தல்

இலங்கையில் 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகளிடையே பலவீனமான உடலியல் மற்றும் வாய்ச் சுகாதாரம், அதிக சீனி மற்றும் உப்புப் பாவனை, சீனிப் பானங்கள் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுகளை உட்கொள்ளல், போதியளவு உடல் அப்பியாசங்கள் மற்றும் தூக்கமின்மை, டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாயிருத்தல், சுற்றாடல் கூருணர்வு இன்மை போன்ற ஆரோக்கியமற்ற சுகாதாரப் பழக்க வழக்கங்கள் அதிகாமாகக் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக காணப்படுகின்ற விஞ்ஞானபூர்வமான தரவுகள் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள 2025 – 2029 முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய பல்துறைசார் மூலோபாய செயற்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில், முன்பிள்ளைப்பருவ சுகாதார விருத்தி தொடர்பான பங்காளர்களுடன் இணைந்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ‘சமூக மற்றும் நடத்தை ரீதியான மாற்றத்தின் கீழ் சிறுவர் சுகாதார மேம்பாட்டுக்கான தேசிய தொடர்பாடல் வேலைத்திட்டம்’ எனும் பெணரிலான வேலைத்திட்டமொன்றை யுனிசெஃப் நிறுவனத்தின் நிதியனுசரணையுடன் 2025 ஆம் ஆண்டில் கீழ்க்காணும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

• இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சாத்தியமானதும் பொருத்தமான தயார்படுத்தல்களுக்கு முன்பள்ளிச் சமூகத்தை தெரிவு செய்தல்

• சுகாதாரம், ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பிள்ளைப்பருவ கல்விப் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 277 உத்தியோகத்தர்களுக்கான வேலைத்திட்டமாக பிரதான பயிற்றுவிப்பாளர்களாக பயிற்றுவித்தல்

• குறித்த பயிற்றுவிப்பாளர்கள் மூலம் இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறு தெரிவு செய்யப்பட்ட 900 சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவித்து, ஏற்புடைய செயற்பாடுகளை அந்தந்த முன்பள்ளிகளில் மேற்கொள்வதற்குத் தேவையான தொடல்பாடல் செயற்கருவிகள் அடங்கிய பக்கேஜ் ஒன்றை வழங்கல்

• சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறித்த தொடர்பாடல் செயற்கருவிப் பக்கேஜ் இனைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் மற்றும் தொடர்ந்து இப்பக்கேஜ் இனைப் பயன்படுத்துவதற்குள்ள ஆற்றல்வளங்கள் தொடர்பாக தொடராய்வு வேலைத்திட்டமொன்றின் மூலம் உறுதிப்படுத்தல்


மேற்குறிப்பிட்டவாறு 2025 ஆம் ஆண்டில் குறித்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் அடைந்துள்ள முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள ளுவுநுP – ருP ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ‘சமூக மற்றும் நடத்தை மாற்றத்தின் மூலம் சிறுவர் சுகாதார மேம்பாட்டுக்கான தேசிய தொடர்பாடல் வேலைத்திட்டத்தை’ நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


04. இலங்கை தேசிய சட்ட உதவிகள் தினத்தை பிரகடனப்படுத்தல்

ஆபத்துக்களுக்கு ஆளாகக் கூடிய குழுக்கள் மற்றும் விளிம்பு நிலையிலுள்ளவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் நீதியை அணுகுவதற்கான வசதிகளை வழங்கும் எதிர்பார்ப்புக்களுடன், 1978 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்ட உதவிச் சட்டத்தின் கீழ் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது. சட்ட உதவிச் சேவைகளை வழங்குதல் மற்றும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் மூலம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், சட்டவாட்சியைப் பலப்படுத்துவதற்காகவும், நீதிக்கான அணுகலை அதிகரிப்பதற்கும் ஆணைக்குழு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கி வருகின்றது.

சட்ட ரீதியான தேவைகள் மற்றும் பரிகாரங்கள் தொடர்பாக பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல், சட்ட வலுவாக்கம் தொடர்பான தேசிய உரையாடலுக்கான வசதிகளை வழங்கள் சட்ட உதவிச் சேவைகளின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களின் புரிதலை அதிகரிக்கும் நோக்கில் தேசிய சட்ட உதவித் தினத்தைப் பிரகடனப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 1978 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்ட உதவிகள் சட்டம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட யூலை மாதம் 06 ஆம் திகதியை ‘இலங்கை தேசிய சட்ட உதவிகள் தினமாக’ பிரகடனப்படுத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


05 இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கான கணணி வலையமைப்பை நிறுவுதல்

இலங்கை பரீட்சைத் திணைக்களம் தேசிய ரீதியிலான பரீட்சைகள் உள்ளிட்ட 300 பரீட்சைகளுக்கும் அதிகமாக வரடாந்தம் நடாத்தி வருவதுடன், குறித்த பரீட்சைகள் அனைத்தின் தரவுகள் மற்றும் தொழிற்பாடுகள் பற்றிய முக்கிய பணிகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு கணணி முகாமைத்துவ தகவல் முறைமையொன்று பயன்படுத்தப்படுகின்றது. குறித்த திணைக்களத்தின் தொழிற்பாட்டுப் பணிகள், ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்துவமான கணணி வலையமைப்பாகக் காணப்படுவதால் பரீட்சை செயன்முறையில் பெரும்பாலான அத்தியாவசியப் படிமுறைகள், மனித வளங்களை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், தரவுகள் மற்றும் பதிவேடுகள் பௌதீக ரீதியாக கிளைகளுக்கிடையே மாற்றப்படுகின்றது. அதனால், வினைத்திறன் குறைவடைதல், தாதங்கள் ஏற்படுதல், பௌதீக மற்றும் மனித வளங்கள் விரயமாதல் இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது அமுல்படுத்தப்படும் அரச துறையின் சேவைகள் டிஜிட்டல்மயப்படுத்தும் செயன்முறைக்கமைய பரீட்சைத் திணைக்களத்தின் கணணி வலையமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தரமுயர்த்துவது முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து கிளைகளையும் உள்ளடக்கியவாறு விரிவான கணணி வலையமைப்பைத் திட்டமிடல், நிறுவுதல் மற்றும் அமுல்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டம்

மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நிறைவேற்றுத் தரத்திலுள்ள இளவயது அரச உத்தியோகத்தர்களுக்கான தொழில்வாண்மை அபிவிருத்திக்கு ஜப்பான் அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்குரிய துறைகளில் உயர்கல்வித் தகைமைகள், தொழில்சார் திறன்கள் மற்றும் சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் இலங்கையின் அரச சேவையின் இயலளவுகளைப் பலப்படுத்துவதற்காக இவ்வேலைத்திட்டம் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்துள்ளது.

இவ்வேலைத்திட்டம் ஜப்பான் அரசின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி ஒத்துழைப்புப் பணிச்சட்டகத்தின் கீழ் நிதியனுசரணை வழங்கப்படுவதுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை மூலம் அமுல்படுத்தப்படுகின்றது. வருடாந்தம் 15 அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வேலைத்திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில் வழங்கப்படுவதுடன், தற்போது 255 பட்டப்பின்படிப்பு பாடநெறிகளும் மற்றும் 16 கலாநிதிப் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள 282 மில்லியன் ஜப்பான் யென் நிதிக்கொடையை (ஏறத்தாழ 575 மில்லியன் ரூபாய்கள்) பெற்றுக்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்தும் வேலைத்திட்டம்

தற்போது இலங்கையில் அதிகமாக டீசல் வலுசக்திப் புகையிரதங்கள் அதிகமாக இயங்குவதுடன், அதன் இயங்குநிலை வினைத்திறன் மற்றும் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக பெரும்பாலான புகையிரதப் பாதைகள், சமிக்ஞை முறைமைகள் மற்றும் அதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனால், நவீன மற்றும் நிலைபேறான புகையிரதப் போக்குவரத்து முறைமையை நிறுவும் நோக்கில், புதிய புகையிரதப் பாதைகளை நிர்மாணித்தல், இரட்டைப் பாதைகளை அமைத்தல், சமிக்ஞை முறைமைகளை மேம்படுத்தல் மற்றும் புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்துவதை மையமாகக் கொண்டு புகையிரத அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சில இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, போக்குவரத்து இயலளவை அதிகரித்தல், பிரயாணக் காலத்தைக் குறைத்தல் மற்றும் சூழல் நேயம்மிக்க பேண்தகு பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அதிக பயணிகள் பிரயாணம் செய்கின்ற புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்திப் பணிகள் நாட்டின் நீண்டகால போக்குவரத்து நவீனமயப்படுத்தல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களுடன் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, கீழ்க்காணும் புகையிரதப் பாதைகளில் இலத்திரனியல் மயப்படுத்தலுடன் கூடிய நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• பிரதான வீதி – கம்பஹஹஹா, வெயாங்கொட, மீரிகம மற்றும் பொல்காவெல போன்ற புகையிரத நிலையங்களின் கட்டிடங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட மருதானை தொடக்கம் றாகம வரையான புகையிரதப் பாதை

• களனிவெலி பாதை – மருதானை தொடக்கம் மாகும்புர வரையான புகையிரதப் பாதை

• கரையோரப் பாதை – மருதானை தொடக்கம் பானந்துறை வரையான பாதை

09. வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை)(தனியார்) கம்பனிக்கான வான்வழிச் செய்திப் பரிமாற்ற முறைமையைத் தாபித்தல்

இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் விமான சேவைகள் துறையில் பங்காளர்களுக்கிடையே பாதிப்புக்களின்றிய இயக்கங்களுக்கு மிகவும் முக்கியமான தளமாக வான்வழிச் செய்திப் பரிமாற்ற முறைமை தொழிற்படுகின்றது. எமது நாட்டின் தேசிய விமான தரையிறக்க சேவை வழங்குநரான வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை)(தனியார்) கம்பனியிடமுள்ள வான்வழிச் செய்திப் பரிமாற்ற முறைமையின் ஆயுட்காலம் முடிவடைந்து வருவதால், தற்போதுள்ள முறைமைக்குப் பதிலாக நவீன முறைமையை விநியோகித்து, நிறுவி மற்றும் இயக்க வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை)(தனியார்) கம்பனியின் மூலதனப் பாதீட்டின் மூலம் 1,000 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் இரத்மலானையில் அமைந்துள்ள வான்வழிச் செய்திப் பரிமாற்ற முறைமையை மீள நிறுவுவதற்குத் தேவையான பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்க துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இந்தியாவின் புதுடில்லி (DEL) விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான விமானப் பயணிகள் முகாமை மற்றும் தரைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்

இந்தியாவின் புதுடில்லி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கான விமானப் பயணிகள் முகாமை மற்றும் தரைச் சேவைகளை வழங்குநர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன.

அதற்காக 02 விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமுறிகளை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமானளவு பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான Bird Flight Services (India) Private Limited இற்கு, குறித்த சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 2026.06.01 தொடக்கம் 2029.05.31 வரைக்குமான 03 ஆண்டு காலப்பகுதிக்கு 332.85 மில்லியன் இந்திய ரூபாய்கள் தொகைக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.தேர்தல்களின் போது அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை அடையாளமிடல் தொடர்பான சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குதல்

எமது நாட்டில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்கைப் புள்ளடியிடுவதற்கு சமூகமளிக்கும் வாக்காளர்கள் செல்லுபடியான அடையாள அட்டை மூலம் தத்தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டயாமாவதுடன், குறித்த அனைத்து வாக்காளர்களும் அழியாத பூச்சைப் பயன்படுத்தி பொருதடதமான அடையாளத்தில் புள்ளடியிடுவது கட்டாயமானதாகும்.

இப்பணிகள் இரண்டிலும் எதிர்பார்க்கப்படுவது வாக்காளர் ஒருவர் ஒரு தேர்தலில் வாக்கெடுப்பின் போது ஒன்று மேற்பட்ட தடவைகள் வாக்களிப்பதை தடுப்பதேயாகும்.

ஒரே எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒன்றுக்கொன்று வேறான முறைமைகள் இரண்டினைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாக்கெடுப்பு நிலையங்களில் கடமைகளை வினைத்திறனாக மேந்கொள்வதற்கு தடையாக உள்ளமையும், அரசுக்கு மேலதிக செலவும் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால், அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை பொருத்தமான வகையில் அடையாளமிடல் தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் நீக்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குவதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு
• 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம் பிரிவு
• 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு
• (262 ஆம் அத்தியாயமான) உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 53அ. பிரிவு
• 1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்தின் 21 ஆம் பிரிவு

12. விலங்குகள் நலனோம்புகை சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடல்

விலங்குகள் நலனோம்புகை தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் ஏற்பாடுகளை பரிசீலித்துப் தகுந்த விதந்துரைகளை முன்வைப்பதற்காக 2025.12.29 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் விசேட நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், விலங்குகள் நலனோம்புகை தொடர்பான இறுதிச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2026.05.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் விலங்குகள் நலனோம்புகை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இச்சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. உள்ளுராட்சி அதிகாரசபைகள் தேர்தலில் வெற்றியீட்டிய குறித்த நிறுவனங்களில் பிரதி நகரமுதல்வர்ஃஉப தவிசாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான சம்பளமற்ற விடுமுறை வழங்கல்

2021.06.25 ஆம் திகதிய பொது நிருவாக சுற்றறிக்கை 12ஃ2021 இன் ஏற்பாடுகளுக்கமைய, உள்ளுராட்சி அதிகாரசபைகள் தேர்தலில் வெற்றியீட்டிய குறித்த நிறுவனங்களில் பிரதி நகரமுதல்வர்ஃஉப தவிசாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு மாதமொன்றுக்கு 06 நாட்கள் சம்பளத்துடன் கூடியதான விடுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆயினும், குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கும், அதுசார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டுள்ள கடமை விடுமுறைக்காலம் போதாமையாக இருப்பின், அவ் உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவது பொருத்தமானதென நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையிலும் மற்றும் அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்ளுராட்சி அதிகாரசபைகள் தேர்தலில் வெற்றியீட்டிய குறித்த நிறுவனங்களில் பிரதி நகரமுதல்வர்ஃஉப தவிசாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான உள்ளுராட்சி அதிகாரசபைகள் தேர்தலில் வெற்றியீட்டிய குறித்த நிறுவனங்களில் பிரதி நகரமுதல்வர்ஃஉப தவிசாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகளைக் கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் தாபனவிதிக் கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்து சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. ஆய்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய ஆணைக்குழுவை தாபித்தல்

நாட்டின் அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார விருத்தியை துரிதப்படுத்தல், புத்தாக்கங்களை மேம்படுத்தல், போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைவதற்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் அவசியமாக காரணியாகக் கருதப்படுகின்றது. அதன்மூலம் பெறுமதி சேர் பண்டங்கள் மற்றும் சேவை உற்பத்தி, மனித மூலதனத்தைப் பலப்படுத்தல், தேசிய பிரச்சினைகளுக்கு புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகப்படுத்தல் மற்றும் வளங்களை பேண்தகு வகையில் முகாமைத்துவப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்கின்றது.

எமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஒருசில துறைகளை மாத்திரமே மையப்படுத்தி இருக்கின்றமை, நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்களிலுள்ள பலவீனங்கள் மற்றும் போதியளவான கொள்கை மற்றும் நிதி ரீதியான பங்களிப்புக்கள் கிடைக்காமையால், அதற்காக பயன்படுத்துகின்ற வளங்களிலிலிருந்து எதிர்பார்க்கின்ற அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

அதனால், ஆய்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒட்டுமொத்த செயன்முறையை தொடர்புபடுத்தக் கூடிய வினைத்திறனான ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை தாபிக்கக் கூடிய வகையில் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள வகையில் தேசிய ஆணைக்குழு மற்றும் அவ் ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்கான சாத்திய வளங்களுடன் கூடிய அலுவலகமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களில் வௌ;வேறாக இயங்குகின்ற ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயன்முறையை ஒரே பணிச்சட்டகத்தில் வலுவாக்கம் செய்தல் மற்றும் ஆய்வுகளின் பெறுபேறுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக ஆய்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய ஆணைக்குழுவை தாபிப்பதற்கும், அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படை சட்டமூலம்ஃகருத்தாக்கப் பத்திரத்தைத் தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. நிதி மூலோபாயக் கூற்று – 2027
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை அதிகரிக்கும் நோக்கில் நடுத்தரக்கால மூலோபாயங்களை தயாரித்து அமுல்படுத்த வேண்டும். அச்சட்டத்தின் 11 ஆம் பிரிவுக்கமைய நிதி விடயதான அமைச்சர் அவர்களால் நடுத்தரக்கால நிதிப் பணிச்சட்டகத்துடன் கூடிய நிதி மூலோபாயக் கூற்றை வருடாந்தம் தயாரித்து சமர்ப்பித்தல் வேண்டும்.

நிதி மூலோபாயக் கூற்றின் மூலம் தேசிய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான மூலோபாயங்களை வழங்குவதுடன், அதற்கு அரசின் நிதி நோக்கங்கள், இலக்குகள் மற்றும் கொள்கைகள் உள்ளடங்கும்.

அரசி நிதி முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நிதி மூலோபாயக் கூற்றில் நிதி நோக்கங்களை அடைவதற்கு எதிர்கொள்ள நேரிடுகின்ற முக்கிய நிதி இடர் மூலங்களை திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டியதுடன், அவற்றால் ஏற்படக்கூடிய அரச நிதித் தாக்கங்கள் தொடர்பான மதிப்பீடொன்றும் அதில் உள்ளடங்கும்.

நிதி மூலோபாயக் கூற்றுக்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்க வேண்டியதுடன், பின்னர் ஆண்டின் யூன் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நிதி அமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி மூலோபாயக் கூற்றின் அடிப்படையில் தயாரித்தல் வேண்டும். அதற்கமைய, 2027 ஆம் ஆண்டுக்கான நிதி மூலோபாயக் கூற்றின் அடிப்படையில் தயாரித்தல் வேண்டும். மேலும் கூற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

15. அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கடன் முகாமைத்துவச் சட்டத்தின் 25 ஆம் பிரிவுக்கமைய, அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தால் அரசின் கடன் பெறல் மற்றும் ஏனைய கடன் முகாமைத்துவ தொழிற்பாடுகள், அரச கடன் மீதிகள், பிணைகள் மற்றும் உப கடன் வழங்கல் செயற்பாடுகள் மற்றும் முந்திய நிதியாண்டில் உட்சேர்க்கப்பட்டுள்ள ஏனைய நிதியிடல் ஏற்பாடுகள் தொடர்பாக வருடாந்த அறிக்கையொன்றைத் தயாரித்தல் வேண்டும்.

அத்துடன், குறித்த சட்டத்தில் குறிப்பிட்டவாறு நிதி விடயதான அமைச்சரால் வருடாந்த அறிக்கையின் வரைபை மீளாய்வு செய்து அமைச்சரவை அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியதுடன், பின்னர் முந்திய நிதியாண்டு முடிவடைந்து 180 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

பாராளுமன்றத்தால் அங்கீகாரம் வழங்கப்படும் அவ்வறிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படல் வேண்டும். அதற்கமைய, 2025.12.31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டுக்கான அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஆண்டறிக்கைக்கும், குறித்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

16. எல் நினோ (EL NINO) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமித்தல்

இலங்கை காலநிலை மாற்றங்களுக்கு கூருணர்வு மிக்க நாடாக இருப்பதால், உலகளாவிய காலநிலை திருப்புமுனையாக எல் நினோ நிலைமை காரணமாக எமது நாட்டில் மழைவீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதிக வெப்பம், வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய இடர்கள் அதிகரித்துள்ளதுடன், அதனால் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார துறைகள் பலவற்றில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றது.

காலநிலை மாற்றங்களின் தாக்கங்களால் இவ்வாண்டின் இறுதியாண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக்கூடுமென விஞ்ஞானபூர்வமான தீர்க்கதரிசனத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள எல்நினோ நிலைமைகளின் பாரதூரம் மற்றும் தாக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை அரசு அடையாளங் கண்டுள்ளது.

அதனால், ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமுதாயமட்ட அமைப்புக்களுக்கிடையே ஒருங்கிணைப்புக்களைப் பலப்படுத்தி, தேசிய மட்ட செயற்பாட்டுத் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(i) எல்நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக குறுகியகால, நடுத்தரக்கால மற்றும் நீண்டகால திட்டங்களைத் தயாரித்தல், அனைத்து அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டி அனர்த்தங்களின் ஆபத்தான நிலைமைகளைத் தணிப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கீழ்வரும் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்:
• கௌரவ (மருத்துவர்) திரு. தம்மிக்க பட்டபந்தி அவர்கள்
சுற்றாடல் அமைச்சர் – (தலைவர்)
• கௌரவ கே.டீ. லால் காந்த அவர்கள்,
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
• கௌரவ திரு. சமந்த வித்யாரத்ன அவர்கள்
பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்
• கௌரவ திரு. அநுர கருணாதிலக்க அவர்கள்
துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர், மற்றும் வலுசக்தி அமைச்சர்
• கௌரவ திரு. வசந்த சமரசிங்க அவர்கள்,
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
• கௌரவ (மருத்துவர்) திரு. சுசந்த ரணசிங்க அவர்கள்,
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

(ii) மேற்குறிப்பிட்ட அமைச்சரவை உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக கீழ்க்காணும் வகையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமித்தல் :
• ஜனாதிபதி பணிக்குழாம் தலைவர் – (தலைவர்)
• செயலாளர், சுற்றாடல் அமைச்சு
• செயலாளர், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
• செயலாளர், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
• செயலாளர், வலுசக்தி அமைச்சு
• செயலாளர், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு
• நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்
• பணிப்பாளர் நாயகம், வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்
• பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல்திணைக்களம்
• பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம்
• பணிப்பாளர் நாயகம், இலங்கை மகாவலி அதிகாரசபை
• பொது முகாமையாளர், தேசிய நிர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
• பொது முகாமையாளர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி, இலக்ரிசிற்றி ஜெனரேஷன் லங்கா (பிறைவெட்) லிமிட்டட்

Related

Tags: Cabinetஅமைச்சரவை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாரிய போராட்டம் முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடவடிக்கை!

Next Post

திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!
இலங்கை

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

2026-06-23
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-06-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-06-23
சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!
இலங்கை

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

2026-06-23
முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!
இலங்கை

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

2026-06-23
Next Post
திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!

திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

0
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

0
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

0
சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

2026-06-23
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-06-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-06-23
சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி,  பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

2026-06-23

Recent News

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

2026-06-23
இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

2026-06-23
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-06-23
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-06-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.