‘கருப்பு’ (Karuppu) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பின்னர் நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் டி.ஜே. ஞானவேலுடன் இணைந்துள்ளார்.
‘கேஜிஎஃப்’ (KGF) மற்றும் ‘காந்தாரா’ (Kantara) ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ‘ஹொம்பாலே ஃபிலிம்ஸ்’ (Hombale Films) நிறுவனம், சூர்யாவின் இந்தப் புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக இன்று (29) அறிவித்தது.
தற்காலிகமாக ‘சூர்யா 48’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், கதாநாயகியாக காயடு லோஹர் நடிக்கவுள்ளார்.
‘கருப்பு’ (Karuppu) படத்தைத் தொடர்ந்து, சாய் அபியங்கர் மீண்டும் இப்படத்தில் சூர்யாவுடன் இணையவுள்ளார்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் மற்றும் படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ் ஆகியோரும் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
‘ரகு தாத்தா‘ படத்தைத் தொடர்ந்து, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தயாரிக்கும் இரண்டாவது தமிழ்ப் படமாக இது அமைகிறது.

சூர்யா தற்போது ‘சூர்யா 47’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இதில் அவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் நஸ்ரியா நசீம் மற்றும் நாஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (Vishwanath and Sons) திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகத் தயாராகி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
















