• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/29
in இலங்கை, சினிமா, பல்சுவை
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

சோன்வே பிக்சர்ஸ் (zonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது.

ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கியுள்ளார். மேலும், பிரதாப் கண்ணன் மற்றும் இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் இணைந்து தங்களது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வெளியீடாக, கடந்த வாரம் திரைக்கு வந்த இத்திரைப்படம், தற்போது நாடு முழுவதும் 20-இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகின்றது.

சர்வதேச கலைஞர்களின் பங்களிப்போடு, ஈழத்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள ‘கூத்தாடி‘ திரைப்படத்திற்கு, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை திரையரங்குகளில் ரசித்துவிட்டு வெளிவந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது உற்சாகமான கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாகவும், திரளான இளைஞர்களும் வருகை தந்து படத்தை ரசித்து வருவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

படத்தின் கதைக்களம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்கள் கச்சிதமாக, அசத்தலாக நடித்துள்ளதாகவும், படம் உண்மையிலேயே “வேற லெவல்” தரத்தில் உருவாகியுள்ளது என்றும் ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை அள்ளி வீசியுள்ளனர்.

குறிப்பாக, படம் பார்க்கப் பார்க்க மிகவும் சுவாரசியமாகவும், மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருவதாகவும் பெண் ரசிகர்கள் சிலாகித்துக் கூறுகின்றனர்.

படத்தில் இடம்பெற்றுள்ள ‘கூத்தாடி’ போன்ற கதாபாத்திரங்களின் நடிப்பு தங்களைக் கவர்ந்துள்ளதாகவும், ஈழத்துத் திரையுலகில் இந்த புதிய முயற்சி தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இன்றைய நவீன சினிமா காலகட்டத்தில், நமது பழைய கால புராணக் கதைகள், இதிகாசங்கள், மகாபாரதம் போன்ற வரலாற்றுப் பின்னணிகளையும் மற்றும் கிராமப்புறப் பாரம்பரியக் கூத்து கலைகளையும் மையமாகக் கொண்டு, அதனைத் தற்கால இளைஞர்களிடம் மிக அற்புதமாகக் கொண்டு சேர்த்துள்ளதாக மூத்த கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இயக்குனர் கவாஸ்கர் காளியப்பனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஈழத்து சினிமாவின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக அமைந்துள்ள இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு நேரில் சென்று பார்த்து ஆதரவளிக்குமாறு ரசிகர்கள் அன்போடு கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மேலும் பல வெற்றிகரமான படைப்புகளைத் தந்து மென்மேலும் உயர வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.

ரசிகர்களின் இந்த ஏகோபித்த வரவேற்பால் ‘கூத்தாடி’ திரைப்படம் 2ஆவது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cinemasrilanka film
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

Next Post

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

Related Posts

BREAKING

சாகர காரியவசம் கைது !

2026-08-10
இலங்கை

“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!

2026-08-10
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

2026-08-09
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கை

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2026-08-09
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

சிறைச்சாலை மோதல்கள் குறித்து ஆராயத் தொடர்புடைய தலைவர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

2026-08-09
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் 90,000-ஐ நெருங்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை: ஆகஸ்ட் முதல் 8 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-09
Next Post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

நாட்டின் பல மாவட்டங்களில் மழை

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.