16 வயதினிலே, அன்னக்கிளி உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சரிகமப நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
தற்போதும் பல படங்களுக்கு இசையமைக்கிறார்.
இவரது பாடல்கள் பல ரீமேக் செய்யப்பட்டுள்ளன.
இதனால் காப்பி ரைட் (காப்புரிமை) உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் வருகின்றன.
இந்நிலையில் சரிகம நிறுவனம் டில்லி மேல் நீதிமன்றல் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தது.
அதில் 1976 முதல் 2001 வரை பல்வேறு காலகட்டங்களில் பல தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமையை சட்டப்படி பெற்றிருந்தோம்.
ஆனால் இளையராஜா அந்த பாடல்களை தன் சொந்தப் பாடல்கள் எனக்கூறி பிற ஆன்லைன் தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
எங்கள் நிறுவனத்தின் பாடல்கள், இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இதில் சரிகம நிறுவனத்தின் வசம் உள்ள 134 திரைப்படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ , அவற்றுக்கு உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என டில்லி மேல் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதை நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.















