இந்த ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களில் குடிநீர் கட்டணங்கள் திருத்தப்பட வாய்ப்பில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
ஆண்டின் முதல் பாதியில் நீர் சுத்திகரிப்புக்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிடத்தக்க மேலதிக செலவுகளை மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் கட்டண திருத்தத்தின் தேவை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
செயல்பாட்டுச் செலவுகள் ஓரளவுக்கு நிலையாகவே இருப்பதால், தற்போது நீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
நீர் கட்டணங்கள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படுகின்றன.
இருப்பினும், இந்த ஆண்டின் முதல் பாதியில் அதில் எந்த மாற்றமும் செயல்படுத்தப்படவில்லை.














