குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காக நாடு முழுவதும் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது மொத்தம் 652 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது 26,377 பேர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 25 சந்தேக நபர்கள் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
அதேவேளை, 129 பேர் நீதிமன்றப் பிடியாணை நிலுவையில் இருந்தவர்கள் ஆவர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக 53 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 129 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தது.
இது தவிர, போக்குவரத்து தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 4,249 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.














