• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
‘எல்லாம் முடிந்துவிட்டது’: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

‘எல்லாம் முடிந்துவிட்டது’: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/06
in உதைப்பந்தாட்டம், பிரதான செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் பிரேசில் மற்றும் நோர்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்று மோதல், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 

இது அந்த அணிக்கு ஒரு அதிர்ச்சிகரமான தொடர் வெளியேற்றமாகவும், நெய்மரின் கடைசி சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது.

கால்பந்தாட்டத்தின் மிகவும் துடிப்பான திறமையாளர்களில் ஒருவரான நெய்மர், நோர்வேயிடம் 2–1 என்ற கணக்கில் தோல்வியுற்றால் பிரேசிலின் பயணம் திங்களன்று மோசமான முறையில் முடிவுக்கு வந்ததையடுத்து கண்ணீர் விட்டார்.

போட்டியின் பின்னர், தேசிய அணிக்காகத் தான் விளையாடிய கடைசி ஆட்டம் இதுதான் என்பதை, மிகுந்த மனவேதனையுடன் நெய்மர் உறுதிப்படுத்தினார்.

இது குறித்த அறிவிப்பில் நெய்மர்,

போட்டியில் வெல்ல நான் எவ்வளவோ முயன்றேன், ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது, நான் இங்கேதான் தொடங்கினேன், இங்கேதான் முடிக்கிறேன் – என்று நியூ ஜெர்சியில் உள்ள அந்த மைதானத்தைச் சுட்டிக்காட்டினார்.

2010 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புரீதியான போட்டியின் மூலம் பிரேசில் அணிக்காக அவர் தனது அறிமுக ஆட்டத்தை இதே மைதானத்தில்தான் விளையாடியிருந்தார். 

நோர்வேக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அவர், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பின் மூலம் கோல் அடித்தபோதிலும், அது அவரது அணியைக் தோல்வியிலிருந்து காப்பாற்றப் போதுமானதாக அமையவில்லை.

34 வயதான நெய்மர், 130 போட்டிகளில் 80 கோல்கள் மற்றும் 58 கோல் உதவிகளுடன் (assists) தனது பிரேசில் அணி வாழ்க்கையை நிறைவு செய்கிறார்.

கழக அளவிலான போட்டிகளில் பல கிண்ணங்களை வென்று சிறப்பான வாழ்க்கையைக் கொண்டிருந்தாலும், பிரேசில் அணிக்காக இவர் வென்ற ஒரே முக்கிய கிண்ணம் 2013 ஆம் ஆண்டுக்கான ‘கான்ஃபெடரேஷன்ஸ் கிண்ணம்’ (Confederations Cup) மட்டுமே ஆகும்.

நோர்வேயுடனான தோல்வியுடன் சூப்பர் 16 சுற்றுடன் (Round of 16) வெளியேறியது, 1990-க்குப் பின்னர் உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றில் பிரேசில் மிக விரைவாக வெளியேறிய நிகழ்வாகவும் அமைந்துள்ளது. 

உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணியான பிரேசில், தனது முதல் வெற்றிக்குப் பின்னர் நீண்ட காலமாக இந்தக் கிண்ணத்தை வெல்ல முடியாத ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளது. 

5 முறை உலக சாம்பியன் ஆகிய பிரேசில் அணி இறுதியாக 2022 ஆம் ஆண்டில் ஜெர்மனியை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்நியூ ஜெர்சிநெய்மர்நோர்வேபிரேசில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

Next Post

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

2026-08-17
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!
இலங்கை

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

2026-08-17
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!
இலங்கை

வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

2026-08-17
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

2026-08-17
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!
இலங்கை

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

2026-08-17
Next Post
தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – உயிரிழப்புகள் உயரும் அபாயம்?

மீண்டும் பரபரப்பு – நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றமான நிலை!

மீண்டும் பரபரப்பு – நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றமான நிலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

0
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

0
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

0
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

0
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

2026-08-17
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

2026-08-17
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

2026-08-17
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.