எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் இறுதியில் அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன் நோர்வே அணி பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி, முதல் முறையாக ஃபிஃபா உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கு (சூப்பர் 16) முன்னேறியது.
இந்த வெற்றியானது ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக முன்கூட்டியே உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேர வழிவகுத்தது.
நியூயோர்க்-நியூ ஜெர்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற ஆட்டத்தில், நோர்வே கோல்கீப்பர் ஓர்ஜான் நைலண்ட் அபாரமாகச் செயல்பட்டு புருனோ கிமரேஸ் அடித்த பெனால்டி வாய்ப்பைத் தடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் கடைசி 11 நிமிடங்களில் ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்து பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்தார்.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் இறுதிக்கட்டத்தில், பிரேசிலுக்குக் கிடைத்த இரண்டாவது பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி நெய்மர் ஒரு கோலை அடித்தார்.
ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், இத்தொடரில் மொத்தம் ஏழு கோல்களுடன் லியோனல் மெஸ்ஸியின் எண்ணிக்கைக்கு இணையாக உயர்ந்தார்.
அத்துடன், ஜூலை 11 அன்று மியாமியில் நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
24 ஆண்டுகால உலகக் கிண்ண வெற்றி வறட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியைப் பணியமர்த்தியிருந்த பிரேசில் அணி, ஐரோப்பிய அணிகளிடமிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறுவது இது தொடர்ந்து ஆறாவது முறையாகும்.
குறைந்தபட்சம் காலிறுதிச் சுற்றுக்குக் கூட முன்னேற முடியாமல் பிரேசில் வெளியேறியது இறுதியாக 36 ஆண்டுகளுக்கு முன்புதான்.
அப்போது அர்ஜென்டினாவிடம் சூப்பர் 16 சுற்றில் (காலிறுதிக்கு முந்தைய சுற்று) 1-0 என்ற கணக்கில் அவர்கள் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.











