• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/20
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பென் டக்கெட் சாதனை படைக்கும் வகையில் எடுத்த 141 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி இந்தியாவை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வழிவகுத்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி, இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

31 வயதான இங்கிலந்து அணி தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டின் இந்த இன்னிங்ஸ் ஆட்டம், லோர்ட்ஸில் நடந்த எந்தவொரு ஆடவர் ஒருநாள் போட்டியிலும் பதிவான அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகும்.

இது, 1979 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்திருந்த 138 ஓட்டங்களை முறியடித்தது.

Image

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் எடுத்த 387 ஓட்டங்கள் (3 விக்கெட் இழப்புக்கு) அந்த மைதானத்தில் ஒரு ஒருநாள் போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும் அமைந்தது.

இது, 1975 இல் நடைபெற்ற முதல் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 60 ஓவர்களில் அந்த அணி எடுத்த 334 ஓட்டங்களையும் (4 விக்கெட் இழப்புக்கு) முறியடித்தது.

சேஸிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபாரமாக 138 ஓட்டங்களை குவித்தபோது, ​​388 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தது.

அவர் இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில்லுடன் (77) 147 ஓட்டங்களும், விராட் கோலியுடன் (74) 113 ஓட்டங்களும் கொண்ட இணைப்பாட்டங்களை அமைத்தார்.

Image

ஆனால், ஜேக்கப் பெதெல்லின் பந்துவீச்சில் ரோஹத் சர்மா ஆட்டமிழந்து வெளியேறியபோது (அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள்), இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் மங்கி மறைந்தன.

அதிக ரன்-ரேட் தேவைப்பட்ட சூழலில் இந்தியாவின் ஆட்டம் சரிவைச் சந்தித்தது.

சாம் கரன் 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 360 ஓட்டங்களுடன் தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை பர்மிங்காமில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, வியாழக்கிழமை கார்டிப்பில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

பின்னர் தலைநகரில் நடந்த இந்த ஆட்டத்துடன் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரையும் இங்கிலாந்து 4:0 என்ற (ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது) கணக்கில் கைப்பற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

சுருக்கமான விவரம்

இங்கிலாந்து 387-3, 50 ஓவர்கள் ( பென் டக்கெட் 141 ஓட்டம், ஜே. பெத்தல் 91 ஓட்டம், ஜே. ரூட் 74 ஓட்டம்)

இந்தியா 360-7, 50 ஓவர்கள் ( ரோஹித் சர்மா 138 ஓட்டம், ஷுப்மன் கில் 77 ஓட்டம், விராட் கோலி 74 ஓட்டம்; சாம் கர்ரன் 4 விக்கெட்டுகள்)

முடிவு: இங்கிலாந்து 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 

ஆட்டநாயகன்: ஜேக்கப் பெத்தல்

தொடரின் நாயகன்: ஜோ ரூட்

தொடர்: மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது

Related

Tags: Ben DuckettEnglandINDIALord’sODI series
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரிழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!

Related Posts

தனியார் மற்றும் அரச பேருந்துகள்  போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!
இலங்கை

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

2026-08-25
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!
இலங்கை

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

2026-08-25
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

2026-08-25
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!
இலங்கை

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

2026-08-25
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை

யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

2026-08-25
கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!
இலங்கை

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

2026-08-25
Next Post
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!

அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்!

அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்!

ஒன்பதாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

ஒன்பதாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சுரேஷ் சல்லேவுக்கு மேலும 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

சுரேஷ் சல்லேவுக்கு மேலும 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

0
தனியார் மற்றும் அரச பேருந்துகள்  போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

0
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

0
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

0
சுரேஷ் சல்லேவுக்கு மேலும 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

சுரேஷ் சல்லேவுக்கு மேலும 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு! 

2026-08-25
தனியார் மற்றும் அரச பேருந்துகள்  போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

2026-08-25
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா!

2026-08-25
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!

2026-08-25
தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

தாய், தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் காசோலைகளும் வழங்கி வைப்பு!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.