நரசிங்கர் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி நிதியம் நிதிப் பங்களிப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்இபொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் 150 பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் சில குடும்பங்களுக்கு நிதி உதவிகளும்வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் கோ.சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், ம.ஜெகதீஸ்வரன், மேலதிக மாவட்டச் செயலாளர் நா. கமலதாசன், மாநகர முதல்வர் சு.காண்டீபன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் பெற்றோர்களும் என பெருமளவில் கலந்துகொண்டனர்.

















