நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் இன்று (04) ஆம் திகதி அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் (11) ஆம் திகதிக்கு ஒத்திவைக்க அந்த நீதிமன்றத்தின் நீதவான்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழைக்காலநிலையுடன் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குகளில் முன்னிலையாகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு வருகை தருபவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இன்மையால் அந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதவான்களால் வழக்குகள் இவ்வாறு வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

















