யாழில் சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தாயாரின் அடையாள அட்டையில் சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞன் கோரிய நிலையில் அது முரண்பாடாக மாறியது.
பின்னர் குறித்த இளைஞன் தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு வயல் கிணற்றுக்கு அருகே சென்று தீ மூட்டியுள்ளார். அதன்பின்னர் வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















