பிரிட்டனில் சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவிருந்த கைதிகளின் முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, சட்டவிரோத கொ*லை (unlawful killing), கொ*லைக்குச் சமமான குற்றமான manslaughter மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி மரணம் ஏற்படுத்திய குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் இனிமேல் இந்த முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்படமாட்டார்கள்.
இந்த மாற்றத்தின் மூலம், பொலிஸ் அதிகாரி பி.சி. ஆண்ட்ரூ ஹார்ப்பரின் மரணத்திற்கு காரணமானவர்கள் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு கடமையில் இருந்தபோது உயிரிழந்த ஆண்ட்ரூ ஹார்ப்பரின் மரணம் தொடர்பாக ஆல்பர்ட் போவர்ஸ் மற்றும் ஜெஸ்ஸி கோல் ஆகியோர் manslaughter குற்றத்திற்காக தலா 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.
சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், வரலாற்றுச் சிறுவர் பாலியல் குற்றங்கள் மற்றும் சில கடுமையான பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்றவர்களும் முன்கூட்டிய விடுதலைப் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

















