யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.00மணிக்கு இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள்இபேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பல்கலைக்கழக நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்ட பாரிய கிணற்றின் பாவனைக்கான பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.













