பசறை நகரில் நேற்று 495 மதன மோதக பக்கற்றுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த மதன மோதக பக்கற்றுகளை விற்பனை செய்து வந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் 495 மதன மோதக பக்கற்றுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.












