• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கிய 'சிக்மா' திரைப்படம் நாளை வெளியாகிறது.

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/10/01
in ஆசிரியர் தெரிவு, சினிமா
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை (அக்.2) திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து ஜேசன் சஞ்சய் கூறும்போது, “சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.

அறிமுக இயக்குநராக என் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்களை முன்னின்று வழிநடத்திய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்குமரன் அவர்களுக்கும் எனது நன்றி. என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப் ப்ரோ மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகிய இருவருக்கும் நன்றி. நடிகர்கள் சம்பத், ராஜு மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.

எந்தவொரு இயக்குநருக்கும், குறிப்பாக அறிமுக இயக்குநருக்கு அவரது சிந்தனையுடன் ஒத்துப்போகும் ஒளிப்பதிவாளர் அமைவது மிகப்பெரிய வரம். அந்த வகையில் கிருஷ்ணன் வசந்த் அவர்களுடன் பணியாற்றியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அவரது காட்சிப் பார்வையும் புரிதலும் சிக்மா திரைப்படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. அதேபோல், எங்கள் படத்தின் எடிட்டராக அனுபவமும் புரிதலும் கொண்ட பிரவீன் கே.எல். அமைந்ததும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம். இசையமைப்பாளர் தமனின் இசையும், அதிரடியான பீட்டும் திரைப்படத்திற்கு மேலும் உற்சாகமளித்துள்ளது.

ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சிக்மா திரைப்படம் சாத்தியமாகியிருக்காது. குறிப்பாக, எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுப்ரமணியன் நாராயணன் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சீவ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. எங்களது ஆக்‌ஷன் இயக்குநர்களான வெங்கட் மற்றும் சில்வா சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.  படத்தின் மையக் கதைக்களத்திற்கு மிகப்பெரிய ஆற்றலையும், சுவாரஸ்யத்தையும் சேர்த்துள்ளனர். திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் தோற்றத்திற்கும் உணர்வுக்கும் ஏற்ற வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு ஊடகம். அந்த வகையில், சிக்மா திரைப்படத்தை சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாக்குவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். பிராந்திய மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து, பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களையும் சென்றடையும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றியுள்ளோம்.
ஒரு படைப்பின் மீதான நம்பிக்கை எப்போதும் பணிவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடனும், பணிவுடனும், அக்டோபர் 2 ஆம் தேதி சிக்மா திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு, எங்களுடன் இந்தப் பயணத்தை அனுபவிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சினிமா எனும் பிரம்மாண்டமான திறமைக் கடலில், மற்றொரு அறிமுக இயக்குநராக நான் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். இந்தப் பயணத்தில், ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானவை. ’சிக்மா’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

Related Posts

அரேபியக் கடலில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பாகிஸ்தானியர்கள் கைது!
ஆசிரியர் தெரிவு

அரேபியக் கடலில் 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பாகிஸ்தானியர்கள் கைது!

2026-09-30
ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

ஈராகிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ட்ரம்பின் பங்காளிகளை தோற்கடிக்க ஈரான் அழைப்பு!

2026-09-30
ஒக்டோபர் முதல் இடியுடன் கூடிய மழை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

ஒக்டோபர் முதல் இடியுடன் கூடிய மழை அதிகரிப்பு!

2026-09-30
அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் !
ஆசிரியர் தெரிவு

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் !

2026-09-29
‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!
சினிமா

‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

2026-09-29
கிரிக்கெட்டில் தொடங்கி தங்கத்தில் முடிந்த பயணம்!
ஆசிரியர் தெரிவு

கிரிக்கெட்டில் தொடங்கி தங்கத்தில் முடிந்த பயணம்!

2026-09-29

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

“சினிமா எனும் கடலில் பயணத்தை தொடங்குகிறேன்…” – ஜேசன் சஞ்சய்

0
AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

0
காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

காயமடைந்த ‘லொக்கு பெட்டி’யின் தம்பி உயிரிழப்பு

0
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

0
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

2026-10-01

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: