“சிக்மா” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய்யுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் அட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லியிடம், ஜேசன் சஞ்சய்யுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அட்லி, நாங்கள் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம். ஜேசன் எனது தம்பி போன்றவர் எங்களிடம் கதைகள் தயாராக உள்ளன படம் உருவாக்குவதுதான் எங்களுக்குத் தெரிந்த மிகச்சிறந்த வேலை எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஜேசனுடன் இயக்குனராகப் பணியாற்றுவீர்களா? அல்லது தயாரிப்பாளராகவா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “சரியான நேரமும் சரியான திட்டமும் அமையும் போது அதனைச் செய்வோம்” எனத் தெரிவித்தார்.
எனினும், குறிப்பிட்ட எந்தவொரு திரைப்படம் குறித்தும் அவர் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

















