மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலை வேளையில் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வரை இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் லேசான கொந்தளிப்புடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று (மணிக்கு 60-70 கி.மீ வேகம்) வீசக்கூடும் என்பதோடு கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.















