ஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படுமென மாகாணம் அறிவித்துள்ளது.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒன்றாரியோ மக்கள் தங்கள் முதல் அளவை பெறமுடியும். இப்போது 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதைப் பெற்றுள்ளனர்.
திங்கட்கிழமை தொடங்கி, மாகாணம் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருந்தகங்கள் மற்றும் முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் கிடைக்கச் செய்து வருகிறது.
இந்த வயதிற்குட்பட்ட குடியிருப்பாளர்கள் ஒன்றாரியோவில் பங்கேற்கும் மருந்தகங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் நேரடியாக தங்கள் சந்திப்புகளைப் பதிவு செய்யலாம்.
அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 350 மருந்தகங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும். இது மாகாணத்தில் மொத்தம் 700ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



















