பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இயக்கத்தினர் போன்றவர்களைக் கொண்டு மட்டக்களப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் குழப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியான நிலைமை இருந்து சகல துறைகளும் சீராக இயங்கும்போதே தொழிற்சாலைகளை மாவட்டத்திற்குக் கொண்டுவர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்பிருந்த அரசாங்கம் வேலைத் திட்டத்தினை முன்மொழியுமே தவிர அது நடைபெறுகின்றதா என்பதை அவதானிக்காது. ஆனால், இந்த அரசாங்கம் சரியான நிர்வாகத் திட்டமிடலுடன் குழுக்களை அமைத்துத் திட்டங்களைக் கண்காணித்து வருகிறது.