தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகைக் கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, தமிழக சட்டசபையின் செயலாளர் சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதிய சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்கவுள்ளனர்.
அத்துடன், இந்த கூட்டத் தொடரிலேயே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















