சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(செவ்வாய்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நாளை முதல் குறித்த தடுப்பூசிகள் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.















