இந்தியாவில் கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதிவரை 30 இலட்சம் whatsapp கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை 30 இலட்சத்து 27 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழிநுட்ப விதிகளின்படி 50 இலட்சத்திற்கும் அதிகமான பயனர்களை கொண்ட மிகப் பெரிய டிஜிட்டல் தளங்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















