கொரோனா மற்றும் டெல்டா வைரசையும்விட மிகவும் கடுமையான லெம்டா (LAMBDA) வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளின் மூலம் நன்மை கிடைக்கும் என கொழும்பு மருத்துவ பீடத்தின் மருந்துவியல் தொடர்பான பேராசிரியர் விசேட வைத்தியர் ப்ரியதர்ஷனி கலப்பத்தி நம்பிக்கை வெளியிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் எல்பா வைரஸை போல இல்லை என்றாலும் டெல்டா வைரசுக்கு கொரோனா தடுப்பூசி மூலம் பாதுகாப்பு கிடைப்பதாக தெரிய வந்துள்ளதால், எதிர்காலத்தில் வரக்கூடிய புதியவகை வைரஸ் திரிபுகளுக்கும் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு பெறலாம் என கருத முடியும் என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி வழங்கப்படுவதால் வைரஸ் தொற்று குறைவடைகின்றது. மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றதன் பின்னர் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.