தலிபான் அமைப்பினருடன் இந்திய தூதுவர் முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கட்டார் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான உயர்நிலைக் குழு, ஆப்கான் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இந்த குழுவினர் கடந்த சில நாட்களாக ஆப்கான் நிலைவரங்கள் குறித்து விவாதித்து வருவதாகவும், அந்நாட்டை பயன்படுத்தி பயங்கரவாதிகள் செயற்படுவதை தடுப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.