• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் – சத்தியமூர்த்தி

வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் – சத்தியமூர்த்தி

Dhackshala by Dhackshala
2021/09/06
in இலங்கை, பிரதான செய்திகள்
107 1
A A
0
50
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரை 20 சடலங்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில் 15 சடலங்கள் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் மேலதிகமாக சடலங்களை வைத்திருக்காமல் எரியூட்டும் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இரண்டு சடலங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள எரியூட்டல் நிலையங்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.

இதுதவிர யாழ். மாவட்டத்தில் உள்ள எரியூட்டும் நிலையத்திலும் சடலங்களை எரியூட்ட கிரமமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்.

தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள எரியூட்டல் நிலையங்களுடனும் தொடர்பில் இருக்கிறோம்.

மரணமடைந்தவரின் உறவினர்கள் சிலரை எரியூட்டும் பகுதிக்கு அனுப்புவதுடன் உரிய முறையில் உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பலை கையளிக்கும் விடயத்தில் நாங்கள் சரியான முறையில் செயற்படுவோம்.

இதேநேரம், யாழ். போதனா வைத்தியசாலையில் நான்கு விடுதிகளில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 123 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா நோயாளிகள் உரியநேரங்களில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருக்கின்றது. குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தங்களைத் தாங்களே பார்த்துக்கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும். இவ்வாறு சில நாட்கள் பிந்தி வருகின்றமையால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.

அதிகளவான காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்போது கட்டாயம் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக்கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது மிகச் சிறந்தது” என குறிப்பிட்டார்.

Related

Tags: த.சத்தியமூர்த்திபோதனா வைத்தியசாலையாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை தொடங்குங்கள் – நீலிகா மளவிகே

Next Post

சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது!

Related Posts

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!
இலங்கை

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

2026-02-04
காலநிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

2026-02-04
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

2026-02-04
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!
இலங்கை

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

2026-02-04
இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!
இலங்கை

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

2026-02-04
Next Post
சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது!

சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது!

நல்லூரானின் தீர்த்த திருவிழா இன்று!

நல்லூரானின் தீர்த்த திருவிழா இன்று!

கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியர்களிடம் விசாரணை!

கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியர்களிடம் விசாரணை!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

0
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

0
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

0
காலநிலை தொடர்பான அறிவிப்பு!

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

0
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.