தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒரு சிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை என விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தால் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத இவ்வாறான தவறான கருத்துக்களுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்துகொள்வதன் மூலம் மக்களையும் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வர்த்தக நோக்கத்துடன் பரப்பப்பட்டு வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல், இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் உடனடியாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.















