2021 ஆம் ஆண்டுக்கான 20 இருபது உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் அண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக அண்டி பிளவர் அணிகுழாமுடன் இணைந்திருப்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உறுதிப்படுத்தியது.
அண்டி பிளவர் ஆப்கான் அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் அவரது அனுபவம் உலகக் கிண்ண தொடரில் தமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் அஜிசுல்லா ஃபாஸ்லி கூறியுள்ளார்.
முன்னதாக 2009 – 2014 இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அண்டி பிளவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்த்க்கது.


















