நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி குறித்த திரைப்படம் 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
முதல்நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகரித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த வரக்கூடிய வார இறுதி நாட்களைக் தொடர்ந்து படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


















