சமையல் எரிவாயு கசிவினால் விபத்துக்கள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வினை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
அத்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினர் சென்று இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய பல தீப்பரவல் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.















