நடிகர் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த திரைப்படத்தில் கயடு லோஹர் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் குறித்த அப்டேட் சமீப காலமாக வெளியாகாத நிலையில், தற்போது சிம்பு அப்டேட் ஒன்றை தந்துள்ளார்.
இதன்படி இந்த திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பித்துள்ளதாக தெரிவித்து ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


















