“அம்புலு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ராஜா திரையாங்கில் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே படக்குழு இதனை தெரிவித்தது.
அஜீபன்ராஜின் தயாரிப்பிலும், சுதர்ஷன் ரட்ணத்தினுடைய இயக்கத்திலும் உருவாகியுள்ள அம்புலு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நடைபெறவுள்ளது.
ஆர்.வின்.பிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் படத்துக்கு பலமாக அமையும் எனவும், இசை வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் வருமாறும் படக்குழு அறிவித்துள்ளது.


















