இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.














