இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல நாடுகளில் பரவியுள்ள பெரும் தொற்றுநோயான மலேரியாவை இலங்கையால் கட்டுப்படுத்த முடிந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து வந்த நோயாளிகளைத் தவிர வேறு எந்த மலேரியா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும், மலேரியாவை பரப்பும் நுளம்புகள் இலங்கையில் இன்னும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 25ஆம் திகதி உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.













