• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்திய உயர்ஸ்தானிகரின் வட, கிழக்கு விஜயம் சொல்லும் தெளிவான செய்தி!

இந்திய உயர்ஸ்தானிகரின் வட, கிழக்கு விஜயம் சொல்லும் தெளிவான செய்தி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/25
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா ஓர் இரட்டை சகோதரராக, குறிப்பாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்கள் உட்பட எப்பொழுதும், இலங்கைக்கு துணை நிற்குமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், திருகோணமலையில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தி நம்பிக்கையை மீண்டும் அளித்ததோடு, தெளிவான செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடைய சந்திப்புக்களும், கரிசைனகளும் இந்தியா, தமிழ் பேசும் சமூகங்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கையின் மீதும் எவ்வளவு தூரம் ஆழமான கரிசைனையைக் கொண்டிருக்கின்றது என்பதை அப்பட்மாக வெளிப்படுத்தியுள்ளது.

முதலில், அவர் விஜயம் செய்த இடங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்வுகளை கவனத்தில் கொள்கின்றபோது, விஜயத்தினை ஆரம்பிதவுடன் கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்ததோடு, வறுமைக்கோட்டிற்குள் சிக்கியுள்ள நூறு மாணவர்களுக்கு உதவித்திட்டத்தினை அறிவித்ததோடு, இந்திய புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் வெளிப்படுத்தினார்.

பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை அலகின் நிர்மாணப்பகுதி, இராமகிருஸ்ணமிஷன்,  காத்தான்குடி உள்ள பதுரியா ஜும்ஆ மசூதி மற்றும் மெத்தை பெரிய பள்ளிவாசல் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ததோடு, மட்டக்களப்பில் 1967 இல் நிறுவப்பட்டிருந்த தேசபிதா மகாத்மா காந்தி சிலைக்கு மலரஞ்சலியும் செலுத்தினார்.

இதன்போது, சமயத்தலைவர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களையும் சந்தித்து சுமூகமான கலந்துரையாடல்களில் பங்கேற்றதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து, திருகோணமலைக்குச் சென்ற அவர், தொன்மைமிகு இந்து ஆலயமான திருக்கோணேஸ்வரத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்கேற்றதோடு,  ஆலயத்திற்கு அண்மையிலும் வெகுதூரத்திலும் இருக்கும் பக்தர்களுக்கான யாத்திரை ஸ்தலமாக இந்த ஆலயத்தினை புனருத்தாரணம் செய்வதற்கான கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து திருகோணமலையில் உள்ள லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன வளாகத்தில் மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் பங்கேற்றவர்,  ‘இலங்கையின் சக்தித் தேவையினை நிவர்த்தி செய்வதிலும் உற்பத்தித்துறையில் அதிகரித்துவரும் சக்தி தேவையினை பூர்த்தி செய்வதிலும்  லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் வகிபாகம் பாராட்டுதலுக்குரியது’ என குறிப்பிட்டார்.

அதனையடுத்து மிக முக்கியமாக, கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜெயந்த குலரத்னே மற்றும் விமானப் படை அக்கடமியின் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோரைச் சந்தித்தவர்,

இந்தியாவால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட டோனியர் விமானத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஆயுதப்படையினருக்கு உறுதுணையாக இருந்துவரும் இந்திய கடற்படையினரின் தொழில்நுட்ப பிரிவினருடனும் சம்பாசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 400 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவி அடிப்படையிலான நிவாரணப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக ஏற்கனவே 4 பில்லியன் டொலர்கள் வரையில் கடன்களாக வழங்கியுள்ளது.

அந்தக்கடன்களின் கீழ், அத்தியாவசிய உலருணவுப்பொருட்கள், மருந்துவகைகள், விவசாயத்துக்கான உரங்கள் என்று தொன்கணக்கானவை ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் ‘அயலுறவுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு அமைவாக, இலங்கை நெருக்கடிக்குள் சிக்கித்தவித்த வேளையில் இந்தியா எவ்விதமான பிரதிபலன்களையும் எதிர்பாராது முன்வந்து உதவியிருந்தது.

இவ்வாறானதொரு நிலைமையில் தான், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அவர், இலங்கை வாழ் மக்களின் இருப்புடன் சம்பந்தப்பட்ட கல்வி, சுகாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அதிகூடிய கரிசனைனை வெளிப்படுத்தியதோடு இந்தியாவினுடைய ஒத்துழைப்புக்களும், ஒத்தாசைகளும் தொடர்ந்தும் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

அதுமட்டுன்றி, கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினக் குழுமங்களுடனும் பாரபட்சமன்றி உரையாடல்களைச் செய்ததோடு, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் முதற்கட்டமாக வழங்கிவைத்துள்ளார்.

விசேடமாக, இலங்கையின் கரையோரப்பாதுகாப்புக்காக இந்தியா ஏற்கனவே டோனியர் விமானத்தினை கையளித்து அதற்கான பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.

இந்நிலையில் உயர்ஸ்தானிகர், அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இலங்கையின் தேசிய பாதுகாப்புடன் கூடுதல் தொடர்புடைய இலங்கையின் கரையோரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அக்கறையைச் செலுத்தியுள்ளமை விசேடமானதாகும்.

இலங்கையின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மதித்து, வரலாற்றுப் புகழ்பெற்ற திருகோணஸ்வரத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அந்தக்கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

அதனடிப்படையில், இந்தியா, இலங்கையின் பாண்பாடு, கலாசாரம், மரபுரிமைகளை காப்பதிலும், மேம்படுத்துவதிலும் எவ்வளவு தூரம் ஆர்வத்தினைக் கொண்டிருக்கின்றது என்பதை உயர்ஸ்தானிகர் பிரதிபலித்துள்ளார்.

இலங்கையின் வளங்ளையும், வரலாற்றுத்தொன்மங்களையும், அபகரிப்பதற்கு சில சக்திகள் கங்கணங்கட்டிக்கொண்டிருக்கின்றன.

அந்த சக்திகள் இலங்கையின் நெருக்கடியான நிலைமைகளை பயன்படுத்துவதற்கும் முனைகின்றன.

அவ்வாறான நிலையில், இந்தியா எந்தவொரு எதிர்பார்ப்புக்களும் இல்லாது உதவிகளை வழங்குகின்றது என்றால் இலங்கையின் உற்ற சகோதரன் இந்தியா தானே.

-யே.பெனிற்லஸ்-

Related

Tags: இந்திய உயர்ஸ்தானிகர்கோபால் பாக்லே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணுவிலில் சிறுவன் மீது வாள் வெட்டு!

Next Post

ஸ்திரத்தன்மை- ஒற்றுமைக்கு புதிய பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு!

Related Posts

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!
இலங்கை

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

2026-07-31
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!
இலங்கை

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

2026-07-31
கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!
இலங்கை

கைவினைப்பொருட்கள் ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள்!

2026-07-31
தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

2026-07-31
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!
இலங்கை

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு!

2026-07-31
Next Post
ஸ்திரத்தன்மை- ஒற்றுமைக்கு புதிய பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு!

ஸ்திரத்தன்மை- ஒற்றுமைக்கு புதிய பிரதமர் ரிஷி சுனக் அழைப்பு!

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு சீனாவின் மௌனத்தால் தாமதம்?

அடுத்த பிரச்சினைக்கு தயாரான பிக்பாஸ் வீடு?

அடுத்த பிரச்சினைக்கு தயாரான பிக்பாஸ் வீடு?

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

0
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

0

முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

2026-07-31
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

2026-07-31

Recent News

முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது.

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.