உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு அர்ஜென்டினா, குரோஷியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அரையிறுதி போட்டிக்கான திகதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இடையே எதிர்வரும் 14ஆம் திகதி போட்டி நடைபெற உள்ளது.
அதனையடுத்து எதிர்வரும் 15ஆம் திகதி பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் 02 அணிகள் பங்கேற்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.














