இன்று புதன்கிழமை அதிகாலை தலைநகர் கெய்வ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் போது பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் என்று கூறப்படும் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
இருப்பினும் வான் பாதுகாப்புப் படைகளின் சிறந்த நடவடிக்கை காரணமாக எரிசக்தி வசதிகளும் சேதமாகவில்லை என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மக்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் போர்க் குற்றம் என உலக தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.



















