யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளது.
கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கூட்டத்தில் பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், இராணுவத்தினர், முப்படைகளின் பிரதிநிதிகள், துறை சார் திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.















